புத்தளம் வலயக் கல்விப் பணிமனையால் கௌரவிக்கப்பட்ட அல் அக்ஸாவின் அதிபர் உற்பட உடற்கல்வி ஆசிரியர்கள்
புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் கடந்த வருடம் தேசிய ரீதியில் விளையாட்டுத் துறையில் சாதித்து புத்தள வலயக் கல்விப் பணிமனைக்கு புகழைப் பெற்றுக் கொடுத்த அதிபர்கள் மற்றும் ஆசியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கடந்த வருடம் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியின் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களான உதவி அதிபர் எம்.எச்.எம். பைஸல் , கே.எம். ரிஸாத் மற்றும் எம்.ஏ.ஆர். ரியாஜ் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் அமீரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடமேல் மாகாணத்தின் கல்விப்பணிப்பாளர் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டதுடன், புத்தளம் வலயத்திலிருந்து தேசிய மட்டத்தில் சாதனைகளை நிகழ்த்தி முதல் மூன்று இடங்களை பெற்ற பாடசைலையின் அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பார்கள் ஆகியோர் பங்கேற்றதுடன், அவர்களுக்கான கௌரவிப்புக்களும் இங்கு வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.