தெஹியங்ககை அல் அஸ்ஹர் கல்லூரியின் பழைய மாணவியர் ஒன்று கூடல்.
தெஹியங்கை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவியர் ஒன்று கூடல் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை( 13ம் திகதி ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெஹியங்க அரபா மகளிர் சங்கம் எனும் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
இந்நிகழ்வில் தெஹியங்கை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் வளாகத்தில் கல்லூரி அதிபர் மன்சூர் மபாஹிர் தலைமையேற்று நடாத்தவுள்ளார்.
இந்நிகழ்வானது தெஹியங்கை மண்ணின் வரலாறில் முதன்முறையாக பெருந்திரளான பழைய மாணவியர் ஒன்று கூடல் நிகழ்வாக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வை
தெஹியங்கை பெண்கள் ஊடக அமைப்பு. நெறிப்படுத்தியுள்ளது.
(ரஷீத் எம். றியாழ்)