சுத்தமான இலங்கை நிகழ்ச்சித் திட்டத்தின் வடமத்திய மாகாண வழிகாட்டல் குழு கூட்டம்.
பொறுப்பு மற்றும் நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அடிப்படையிலான செயற்திட்டமான சுத்தமான இலங்கை நிகழ்ச்சித் திட்டத்தின் வடமத்திய மாகாணத்தின் வழிகாட்டல் குழு மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் மாகாண சபை மண்டபத்தில் (09) கூடியது.
இத்திட்டத்தின் அடிப்படைத் திட்டம் இங்கு முன்வைக்கப்பட்டது.அதன்படி கழிவுகளை குறைத்தல் , விழிப்புணர்வை ஏற்படுத்தல் , சுற்றுச்சூழல் அமைப்புக்களைப் பாதுகாத்தல் , சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களை ஊக்குவித்தல்,சமூகப் பங்கேற்பை மேம்படுத்துதல் போன்றவை இதன் அடிப்படை திட்டமாகும்.
குறித்த செயற்திட்டத்திற்கு தேவையான செயற்பாடுகளை மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களாக அடையாளப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன் செயற்பாடுகள் மூன்று பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.முதற்கட்டமாக குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யவும்.நடுத்தர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை 1- 3 வருட காலப்பகுதியிலும் நீண்ட கால சேயற்பாடுகளை 4 – 5 வருட காலப்பகுதியிலும் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகள் மட்டுமின்றி புனித நகரின் புனித தலங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படும் 14 டன் பிரசாதம் பால் உணவுகள் பூக்கள் போன்றவை மட்டும் தினமும் அகற்றப்பட்டு அழிப்பதற்கு பிரதேசத்தில் அதற்கான தனி இடம் உருவாக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதான அமைச்சின் செயலாளர் கே.எம்.எச்.எஸ்.கே.ஜயலத் ஆளுநரின் செயலாளர் விஜய வனசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்