கஹட்டோவிட்டவில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த ஹிஸ்புல்லா எம்.பீ.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கூட்டணியின் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் சந்திப்பும், தேர்தல் பிரச்சார அலுவலகங்களின் திறப்பு விழாவும் கஹட்டடோவிட்ட மற்றும் ஓகொடபொல பிரதேசங்களில் (09) நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
இதன்போது, ஐக்கிய தேசிய கூட்டணியின் கஹட்டோவிட்ட வட்டார வேட்பாளர் அல்ஹாஜ் பிர்தௌஸ், ஏனைய வட்டார மற்றும் பட்டியல் வேட்பாளர்களான ரிசான், ரிப்கான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நாஸர், நஸீர், ரம்ஸான், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் அல்ஹாஜ் ஜவ்ஸி, முன்னாள் மேல் மாகாண சபை வேட்பாளர் அல்ஹாஜ் முஸ்தாக் மதனி, மீரிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் ஆதிக் உட்பட பல்வேறு கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


