கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் “சமுர்த்தி அபிமானி” வர்த்தகக் கண்காட்சியும், விற்பனை நிகழ்வும்
கல்பிட்டி பிரதேச செயலாளகத்தின் அனுசரணையில் கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் “சமுர்த்தி அபிமானி” வர்த்தகக் கண்காட்சியும், விற்பனை நிகழ்வும் இன்று (10) கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
சமுர்த்தி மற்றும் நலன்புரி உதவிகள் பெறும் பயனாளிகளின் உற்பத்திகளுக்கு உரிய சந்தை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் வருடாவருடம் இவ் சமுர்த்தி அபிமானி சந்தைப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
மேலும் கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் சம்பா குமாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் செல்வி சத்துரிக்கா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி மர்ஜானா, சமுர்த்தி பிரிவின் பிரதம முகாமையாளர் மதுரங்கி பெர்னாந்து ஆகியோருடன் கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் தலைமைக் கள உத்தியோகத்தர் அஸீம் மரைக்கார் மற்றும் கள உத்தியோகத்தர்களான தாஸ், சமந்த, பஸ்ஹான், ரிம்ஷான், நிஸாம் மற்றும் நஸ்ரியா ஆகியோருடன் வங்கி உத்தியோகத்தர் இப்திகார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன் கல்பிட்டி பிரதேச செயலாளகத்தின் உததியோகத்திர்கள், கல்பிட்டி சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட பயனாளிகள், வியாபாரிகள் என பெருந்திரளானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)