உடதலவின்ன மடிகேயில் நூலகம்,கலாசார நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு.
கண்டி உடதலவின்ன மடிகேயில் புதிய பொது நூலகம் மற்றும் கலாசார நிலையத்துக்கான மூன்று மாடிவசதிகொண்ட கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரதேச மஸ்ஜிதுகளின் தலைவர்கள் முக்கிய பிரமுகர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சியம்பலாகஸ்தென்ன மஸ்ஜித் தலைவரும் ரோயல் மருந்தக உரிமையாளருமான ஏ.ஆர்.எம்.நியாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு முதலில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பின் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நட்டிவைத்ததுடன் இக்கட்டிட நிர்மான பணிகளுக்காக இவர் இரண்டு மில்லியன் ரூபா அன்பளிப்புசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வின் இறுதியில் பிரதம அதிதி நியாஸ் மற்றும் பிரமுகர் நிலாப்தீன் ஆகியோரது சேவைகளுக்காக அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
இக்கட்டிடத்துக்கான காணியை இவ்வூர் சமூக ஆர்வவர் ஜமால்தீன் முக்தார் அன்பனிப்புச் செய்துள்ளார்.




