சகோதரனின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ருஷ்தியின் சகோதரர்
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்திற்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த முஹம்மத் ருஷ்தியின் விடுதலைக்காக குரல் கொடுத்த, ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அவரது சகோதரர் நன்றி தெரிவித்தார்.
கடந்த 22 ம் திகதி கைதாகிய ருஷ்தி இன்று மாலை அத்தனகல்லை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவில் இரண்டு வாரங்களுக்கொருமுறை முன்னிலையாகி கையொப்பமிடவேண்டுமென்ற நிபந்தனையின கீழ் ருஷ்தி விடுவிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.