ருஸ்தி விடுதலை
கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ருஷ்டி தீவிரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் என்ற உத்தரவில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.