குர்ஆன் தமாம் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள்
பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் ஆத்மீக ஞானி மெளலவி. உதுமான் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் வருடாந்த ஞாபகார்த்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும், புனித ரமழான் மாதம் ஜிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றிய சிறார்களுக்கு பரிசளிப்பு வைபவமும் சிறப்பாக நடைபெற்றது.
சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க். அல்-ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), ஆத்மீக ஞானி மர்ஹூம் உதுமான் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பில் விஷேட சொற்பொழிவாற்றினார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொருளாளர் கலாநிதி. அல்-ஹாஜ் மெளலவி அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி) – பி.எச்.டி துஆ பிரார்த்தனை நடாத்தினார்.
சீனன்கோட்டை பிட்டவளை நூரதுஷ் ஷாதுலிய்யா ஸாவிய்யா பிரதம இமாம் காலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.எம் ஸைனுலாப்தீன் (பஹ்ஜி), சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் காலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), சீனன்கோட்டை ஜாமியதுஷ் பாஸியத்துஷ் ஷாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அல்-ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி) – பீ.ஏ, பிட்டவளை நூரதுஷ் ஷாதுலிய்யா ஸாவிய்யா இமாம் காலீபதுஷ்ஷாதுலி மெளலவி அல்-ஹாஜ் எம்.ஐ.எம் பாரூக் (மக்கி), கலீபதுல் ரிபாயி மெளலவி அல்-ஹாஜ் எ.ஸி அஹ்மத் பளீல் (காஸிமி)உட்பட உலமாக்கள், ஸதாத்மார்கள், பெருமளவிலான இஹ்வான்கள் கலந்து கொண்டனர்.
சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர்களான அல்-ஹாஜ் எம்.எம்.எம் ஷிஹாப், கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அஷ்ஷெய்க். இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), அல்-ஹாஜ் அரூஸ் அனஸ், இணைப் பொருளாளர் அல்-ஹாஜ் ஸப்வான் நயீம், உறுப்பினர்களான அல்-ஹாஜ் இஸ்ஸத் ஸவாஹிர், அல்-ஹாஜ் தஹ்லான் மன்ஸுர், அல்-ஹாஜ் முஸ்னி உவைஸ் உட்பட உலமாக்களினால் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கத்தமுல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ், வழீபா யாகூத்தியா, ஹழரா (திக்ர்) மஜ்லிஸ் அதனைத் தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு இடம் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.









(பேருவளை பீ.எம் முக்தார்)