சீனன்கோட்டையில் போட்டியிடுவதில் பெருமையடைகிறேன்; இளம் வர்த்தகர் அஷ்பான் அஹ்ஸன்
பேருவளை நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சினன்கோட்டை வட்டாரத்தில் போட்டியிடுவதில் பெருமை கொள்வதாக இளம் இரத்தினக்கல் வர்த்தகரான அஷ்பான் அஹ்ஸன் தெரிவித்தார்.
சினன்கோட்டை வட்டார மக்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு (தொலைபேசி சின்னத்திற்கு) வாக்களித்து தன்னை தேர்வு செய்வார்கள் என்ற திடமான நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
சீனன்கோட்டை வீதியில் உள்ள அவரது தேர்தல் பிரச்சார காரியாத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேச இரத்தினக் கல் வர்த்தக சந்தை அமையப்பெற்றுள்ள சீனன்கோட்டை வட்டாரத்தில் நான் போட்டியிடுகிறேன் நான் பிறந்து வளர்ந்த இப்பதிக்கும் இப்பிரதேச மக்களுக்கும் சேவையை பெற்று கொடுக்கும் நோக்குடன் பலரது வேண்டுகோளின் பேரில் நான் போட்டியிடுகிறேன்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் முன்னணி இரத்தினக்கல் வர்த்தகர்கள் வியாபார நடவடி க்கைக்காக இந்த சர்வதேச இரத்தினக்கல் சந்தை தொகுதிக்கு வருகை தருகின்றனர். அதே போல் உள்ளூர் வர்த்தகர்களும் பெருமளவில் ஒன்று கூடி வியாபாரம் செய்யும் பிரதேசமாக சீனன் கோட்டை வட்டாரம் விளங்குகிறது.இச் சுற்றாடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.தினம் தோறும் குப்பை கூலங்கள் அகற்றப்பட வேண்டும். அதேபோல் வடிகான்களை சுத்தம் செய்து வீதிகளை புனரமைத்து கொடுப்பது நகர சபையின் கடமையாகும்.
மக்கள் நகர சபைக்கு வரிப்பணம் செலுத்துகின்றனர். அதற்கேற்ப சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும். குப்பை கூழ பிரச்சினையே இன்று எமது பகுதியில் உள்ள மிக முக்கிய பிரச்சினையாகும். இதற்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுத்து சுற்றுச் சூழலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நகர சபை ஆட்சியை பொறுப் பேற்ற பின்னர் மேற்கொள்ள வேண்டிய பாரிய வேலை திட்டங்கள் பற்றி வேட்பாளர்களுடன் எமது ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் கலந்துரையாடியதோடு அதற்கான திட்டங்களையும் தயாரித்துள்ளோம்.
எனவே உள்ளூராட்சி தேர்தலில் பேருவளை நகர சபையின் நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைத்து சிறந்த சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
சீனன்கோட்டை வட்டார மக்களுக்கு திருத்திகரமான பணிகளை எதிர்காலத்தில் இந்த நகர சபையின் ஊடாக பெற்றுக் கொடுப்பேன்.இரத்தினக்கள் வர்த்தக சந்தை பகுதியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுடன் மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன்.
சீனன்கோட்டை வட்டாரத்திற்கு என்னை தேர்ந்தெடுப்பதன் மூலம் முஹம்மது ரிமாஸ் நில்வானும் போனஸ் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்.நாம் இருவரும் இணைந்து மக்களுக்கு கூடிய சேவைகளை பெற்றுக் கொடுப்போம்.
தேசிய மக்கள் சக்திக்கோ சுயேட்சை அணிக்கோ வாக்களிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்த அஷ்பான் அஹ்ஸன் அந்த இரு அணிகளுக்கும் அளிக்கும் வாக்குகள் குப்பைத் தொட்டில் போடுவதற்கு சமனாகும் என்றார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)