உள்நாடு

துருக்கி தூதரகம் நடாத்திய போட்டியில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் வெற்றி

துருக்கி தூதரகம் நடாத்திய மை மெமோரியல் ரமழான் எனும் தலைப்பிலான கட்டுரை மற்றும் சித்திர போட்டிகளில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் தரம் 05 மாணவர்களான மொகமட் சாஜீத் பாத்திமா முனா கட்டுரை போட்டியில் முதலாம் இடத்தையும், றினாஸ் மொஹமட் றுபை ஈமன் சித்திர போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் ஞாயிற்றுக்கிழமை (06) கொழும்பில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் மற்றும் துருக்கி தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *