இன்று முதல் தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (6) முதல் மே மாதம் 7 ஆம் திகதி வரை தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் எச்.எம்.பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் வாக்கு காப்பீட்டுப் பொதிகள் நாளை (7) தேர்தல் அதிகாரிகளால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் பிரதி தபால்மா அதிபர் எச்.எம்.பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்துள்ளார்.