திட்டமிட்டபடி மே 6 ல் தேர்தல், மாற்றமேதும் இல்லை; ஆணைக் குழுத் தலைவர் ரத்னாயக்க
உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெறும் எனவும் அந்தத் திகதியில் எந்தத் திருத்தங்களும் செய்யப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேலும், உத்தியோகபூர்வ வாக்களார் அட்டைகளை 16 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் ஏப்ரல் 20 ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக நாளாகக் கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தொடர்பான விசேட விவாதம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகவும் இந்த விவாதத்திற்கு அனைத்து அரசு நிறுவனங்களின் செயலாளர்கள் உட்பட தேர்தலில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.