தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் இந்தியப் பிரதமர் மோடி
தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கொழும்பில் சற்றுமுன்னர் சந்தித்து பேச்சு நடத்தினார் இந்தியப் பிரதமர் மோடி .
”இலங்கைத் தமிழ் சமூகத் தலைவர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மதிப்பிற்குரிய தமிழ்த் தலைவர்களான ஆர். சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இருவரும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினேன். எனது வருகையின் போது தொடங்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் முயற்சிகள் அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்.” என்று மோடி தெரிவித்துள்ளார்.