உலகம்

சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும், அவர்களது படகுகளையும் விடுவிக்க ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தல்

”இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்” என இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக்கிடம்
பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

கொழும்பு நகரில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடத்தினார். இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக மற்றும் நெருக்கமான உறவுகள் உள்ளன.

மீனவர்களை விடுவிக்கணும்
இலங்கை பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும். இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
தமிழர்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகிறேன்.மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்னையில் இலங்கை தவித்த போது இந்தியா துணை நின்றது. இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள மூன்று கோவில்களை சீரமைக்க இந்தியா உதவும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதனிடையே, தனது இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கையில் தரையிறங்கி விட்டேன். விமானநிலைத்திற்கு வந்து என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி. இலங்கையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *