உள்நாடு

காலி தல்கஸ்வல தமிழ் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் காலி தல்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் தரம் 09 திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி ஒன்று பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவற்றுப் பணிப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் மற்றும் மாத்தறை ஹூளந்தாவ தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் எஸ். சதாசிவம் ஆகியோர் இத்தலைமைத்துவ பயிற்சியின் வளவாளர்களாக கடமையாற்றியதோடு பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் திட்ட பணிப்பாளர் லவீனா ஹசன்தி, மாவட்ட இணைப்பாளர் ஆ. ஜெஸ்மன் மற்றும் காலி மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் கவிஸ்க ஆகியோர் வசதியளிப்பவர்களாக செயற்பட்டனர்

இப் பயிற்சியின் மூலம் மாணவர்கள் தங்களைப்பற்றி அறிந்துக் கொள்வதற்கும், தங்களை மிக ஆழமாக ஆராய்வதற்கும் முற்பட்டனர். அதேவேளை தனது பாடசாலை மற்றும் சமூகத்துக்காக தலைமைத்துவத்தை வழங்குவதன் முக்கயத்துவத்தை தமது அனுபவங்களின் ஊடாக பகிர்ந்துக் கொண்டனர்.

இந்த பயிற்சிக்கான நிதி உதவியினை வி.ஐ.ஆர்.ஐ டி.டி எச்.ஐ
(VIRIDDHI),யூ.என்.ஓ.பீ.எஸ் (UNOPS,), மற்றும் அவுஸ்திரேலியா எயிட் (Australian Aid) ஆகிய நிறுவனங்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *