உள்நாடு

கொழும்பு நகரில் தூய்மையான ஆட்சியை முன்னெடுப்போம். மாநகர மேயர் வேட்பாளர் வைத்தியர் ருவைஸ் ஹனீபாவின் கொள்கை ஆவணம் வெளியிடும் நிகழ்வில் சஜித் பிரேமதாச.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றும் போது

ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்கள், மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்கள், நேர்மையானவர்கள், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்கள், நீதி நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களை எதிர்பார்க்கிறார்கள். புதிதாக ஒன்றைச் செய்யும், நாட்டுக்கு நேர்மையையும், கூறுவதை செவிமெடுக்கும், மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர். சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், திறம்பட்ட சேவையை ஆற்றுவோரை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு மக்கள் எதிர்பார்க்கும் இதற்கு மிகவும் பொருத்தமான நபரை ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபைக்கு முன்னுறித்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாளிகாவத்தை Grand Zenith வரவேற்பு மண்டபத்தில் நேற்று (02) நடந்த “மகிழ்ச்சியுடன் கூடிய கொழும்பு நகருக்கு” எனும் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் வைத்திய கலாநிதி றுவைஸ் ஹனிபாவின் கொள்கை ஆவணத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு குறிப்பிட்ட வர்த்தகக் குழுவின் மாதிரியாக நடந்து கொள்ளும் பொம்மை அரசியல்வாதிகளைக் கொண்ட அரசியல் இயக்கம் அல்ல. எனவே நாம் எமது பலவீனங்களை சரிசெய்து பலத்தோடு முன்னோக்கிப் பயணிப்போம். நாட்டு மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 பெறுமதி சேர்க்கும் சேவையை ஆற்றுவோம்!

சம்பிரதாய மாநகர சபை சேவைக்கு அப்பால் சென்று முழு மக்களுக்கு பெறுமதி சேர்க்கும் சேவையை கொழும்பு நகருக்குப் பெற்றுத் தருவோம். சுகாதாரரம், கல்வி, வீட்டுக் வசதிகள், மற்றும் பொது வசதிகளை புதிய தொழில்நுட்பத்துடன் திறம்பட, வேகமான சேவையை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்போம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆட்சியை கொண்டு வருவோம். தொழில்முயற்சியின் ஊடாக நகரை கட்டியெழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

🟩 வெளிப்படையான ஆட்சிக்காக வேண்டி அணிதிரள்வோம்.

ஊழல், மோசடி அல்லது திருட்டு இல்லாமல் எந்தவொரு குடிமகனும் கேள்வி கேட்கக்கூடிய, எந்தவொரு நபருக்கும் தகவல் அறியும் உரிமையை வழங்கும், குடிமக்கள் பங்கேற்பை அதிகரிக்கும், தூய்மையான ஆட்சியை முன்னெடுப்போம். மகிழ்ச்சி நிறைந்த நகரத்திற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுதந்திரத்தின் பின்னர் கொழும்பு குறித்து மக்களின் எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நனவாகும் சமூக உடன்படிக்கை வைத்திய கலாநிதி றுவைஸ் ஹனிபாவின் தலைமையில் இன்று முன்வைக்கப்படுகிறது. இதன் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் உண்மையான மாற்றம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *