உள்நாடு

இலங்கைக்கு அதிக பட்ச வரி.ட்ரம்பின் தீர்மானம் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிப்பதற்னகான நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இது அமெரிக்கா மீது இலங்கை விதித்த 88 சதவீத வரிகள் மற்றும் வர்த்தக தடைகளுக்கு பதில் நடவடிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி இடமாக அமெரிக்கா தொடர்ந்தும் உள்ளது, மொத்த வணிக ஏற்றுமதியில் 23% பங்களிக்கிறது.

2023 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு மொத்த ஏற்றுமதி மதிப்பு 2,758.57 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், அதே காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு மொத்த இறக்குமதி 507.40 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது. 2023 ஆம் ஆண்டில் இலங்கைக்கான மூன்றாவது இறக்குமதித் தாயகமாக அமெரிக்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *