4.3 அளவில் பாகிஸ்தானில் நில அதிர்வு
பாகிஸ்தானின் இன்று காலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதோடு பலுசிஸ்தானில் உள்ள உத்தாலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இதன் மையப்பகுதி அமைந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.