வட மத்திய முன்னாள் முதலமைச்சருக்கு 16 வருட கடூழிய சிறை
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்துக்கும் அவரது தனிப்பட்ட செயலாளருக்கும் தலா 16 ஆண்டுகள் கொழும்பு உயர் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.