கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்: சாய்ந்தமருது பொதுவிளையாட்டு மைதானம் புனர்நிர்மாணம் செய்து வைப்பு
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிப்புள்ளாகி, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானம் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ்இன்று (02) புதன்கிழமை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் சீரமைக்கப்பட்டது. கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியோரின் ஒத்துழைப்புடன் அவர்களது இயந்திரங்களின் மூலமாக துப்பரவு செய்து, புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, விளையாட்டு கழகங்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட இந்நிகழ்வில், கல்முனை மாநகர பொறியியலாளர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.









(எம்.எஸ்.எம்.ஸாகிர்)