கற்பிட்டி நகரில் முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் நடவடிக்கை முன்னெடுப்பு தொடர்பான கலந்துரையாடல்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் நடவடிக்கைகள் கற்பிட்டி நகரில் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது அத்தோடு கடந்த முறை கற்பிட்டி பிரதேச சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது போன்று எதிர்நோக்கியுள்ள கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக
திகழ்வதற்கான வேலைத்திட்டங்கள்தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பிரதேச சபையின் தலைமை வேட்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் எஸ்.எச் எம் நியாஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் எம் எச் எம் ஹில்மி ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் கற்பிட்டி நகரின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எஸ்.எம் ஜாகீர்)