இன்று காலையில் தொடராக 3 நாடுகளில் நிலநடுக்கம்
ஒரே நாள் காலையில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்:
பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்:
ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 4.53 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
திபெத்தில் நிலநடுக்கம்:
திபெத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 5.49 மணியளவில் ( இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.