செம்மண்ணோடையில் நோன்புப் பெருநாள் தொழுகை
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய மைதானத்தில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை திங்கட்கிழமை (31) இடம்பெற்றது.
செம்மண்ணோடை குபா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டோர் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து, பெருநாள் வாழ்த்துக் கூறி தங்களது அன்பை பரிமாரிக் கொண்டனர்.
பெருநாள் தொழுகையையும், பெருநாள் உரையையும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும், மார்க்க அறிஞருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி நடாத்தினார்.





(எச்.எம்.எம்.பர்ஸான்)