கொழும்பு பெரிய பள்ளியில் பெருநாள் தொழுகை
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பெருநாள் தொழுகைகள் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றன.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில் பெருமளவானவர்கள் பங்கேற்றிருந்தனர்.
பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே நேரத்தில் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பள்ளிவாசலின் இமாம் மௌலவி அபத்துல் ஹபீழ் (ரவ்லி) பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.










(ஏ.எஸ்.எம். ஜாவித்)