பெருகமலை ஸாக்கிறீன் பள்ளியில் பெருநாள் தொழுகை
பேருவளை சீனங்கோட்டை பெருகமலை ஸாக்கிறீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பிரசங்கம் மற்றும் துஆ பிராத்தனை சிறப்பாக நடைபெற்றது .
அஷ் ஷெய்க் பஹ்ரி அனஸ் ( நளீமி ) பெருநாள் தொழுகையை நடாத்தியதோடு, துஆ பிராத்தனையும் செய்தார். நாட்டின் சாந்தி சமாதானம் மற்றூம் இனங்களுக்கிடையிலான ஐக்கியதிற்காகவும் விஷேடமாக பலஸ்தீன் காஸா மக்களுக்காகவும் உலக முஸ்லீம்களின் விமோஷனத்திற்காகவும் விஷேட துஆ பிராத்தனை நடாத்தப்பட்டமை இங்கு குறிப்பிடப்பட்டது.
பெருமளவிலானோர் பெருநாள் தொழுகையில் பங்குபற்றியதோடு தொழுகையின் பின்னர் ஒருவருக்கொருவர் முஸாபஹா செய்து ரமழான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டமை விஷேட அம்சமாகும்.
பெண்களுக்கான தொழுகை பிரத்தியேகமாக இடம் பெற்றது . பள்ளிவாசல் இமாம் மௌலவி ளியா – உல் – ஹக் ( பாரி ) நடாத்தி வைத்தார் .




(படங்கள் பேருவளை பீ. எம். முக்தார் )