ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையினால் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் ரமழான் மாதத்தை முன்னிட்டு 35 மஸ்ஜித்களில் ஹிஸ்புல் குர்ஆன் நடைப்பெற்றது.
இம்முறை 1327 மாணவர்கள் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்ட 1327 மாணவர்களுக்கும் அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக்கிளையின் சான்றிதழ்களும் மற்றும் மிகவும் பெறுமதியான மாணவர்களுக்கான தண்ணீர் போத்தலும் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வுக்கு பொறுப்பாக இருந்து மாணவர்களை வழிநடாத்திய உலமாக்களுக்கு தலா 10000 ரூபா பணமும் அந்த அந்த மஸ்ஜித் நிர்வாகிகளின் கரங்களில் வழங்கி வைக்கப்பட்டன.
இன்ஷா அல்லாஹ் இனிவரும் ரமழான் மாதத்தில் புத்தளம் நகரக்கிளைக்கு உட்பட்ட அனைத்து மஸ்ஜித்களிலும் ஹிஸ்புல் குர்ஆன் நடைப்பெற வேண்டும் என்ற மிகப்பெரிய நோக்கத்துடனும் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன…
தனவந்தர் ஒருவரின் மூலமாகவே அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
அல்லாஹூதாஆலா அவரின் வியாபாரத்திலும் குடும்பத்திலும் வாழ்க்கையிலும் பரகத் செய்வானாக
அவரின் தாய் தந்தைக்கு உயர்தரமான ஜன்னதுல் பிர்தெளஸ் சுவர்க்கத்தை வழங்கி வைப்பானாக
ஹிஸ்புல் குர்ஆன் ஓதிய அனைத்து ஆலிம்களுக்கும் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கம் அ.இ. ஜ. உ. புத்தளம் நகரக்கிளை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.













ஊடகப்பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக்கிளை