உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளியில் மத்றஸா மாணவர் பரிசளிப்பு நிகழ்வு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் ஜும்ஆ பள்ளிவாயிலில் இயங்கி வரும் அல் மத்றஸதுல் இஸ்லாமிய்யா பகுதி நேர குர்ஆன் மத்ரஸாவில்கடந்த வியாழக்கிழமை (27) பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

ரமழான் பருவ கால போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு, ரமழான் காலத்தில் விஷேடமாக இடம்பெற்ற தரம் 7_11 வரையான மாணவர்களுக்கான நான்கு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல்,2024 ஆம் ஆண்டு மத்றஸா கல்வியை பூர்த்தி செய்து இம் மத்றஸாவிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் அதிபர் அஷ்ஷெய்க் இனாமுல்லாஹ்(ஸலபி) தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மத்றஸாவின் தலைவரும் இப் பள்ளிவாயிலின் உபஸதலைவருமான அல்ஹாஜ் அஷ்ஷெய்க் எம்.என்.எம்.பைரூஸ்(கபூரி) ,செயலாளர் அல்ஹாஜ் எம்.என்.எம்.ஜெளஸி,பொருளாலர் முஹம்மத் ஸப்ராஸ், மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *