மின் கம்பத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்; இரு இளைஞர்கள் படுகாயம்
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் சிக்கி இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (29) 11.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக இரு இளைஞர்கள் பயணித்த போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதில் அருகில் இருந்த மின் கம்பத்தில் சிக்கியுள்ளது.
இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)