அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்தார் சௌக்கத் அலி பறூஸ்
திருகோணமலை மூதூர் நடுத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி சௌக்கத் அலி பறூஸ் (நத்வி) திங்களன்று (3) மூதூர் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து மாவட்ட நீதிவான் H.M.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் சௌகத் அலி.கயாதும்மா தம்பதிகளின் அன்பு புதல்வர் ஆவார்.மூதூர் தி/சதாம் வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் அல்.ஆலிம் பட்டம் பெற்றவர். இலங்கை இதழியல் கல்லூரியில் ஊடக கற்கையை பூர்த்தி செய்த இவர் விடிவெள்ளி , உதயம் பத்திரிகைகளின் செய்தியாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.