முஸ்லிம் திணைக்கள இப்தார் நிகழ்வில் பெருந்தொகையானோர் பங்கேற்பு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு நேற்று (26) திணைக்களத்தின் ஏற்பாட்டில் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதி சபா நாயகர் ரிஸ்வி ஷாலி, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கத்தோலிக்க சமய விவகார திணைக்கள பணிப்பாளர், இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், ஹஜ் குழு உறுப்பினர்கள், வக்பு சபை உறுப்பினர்கள், திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்கள், பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் சம்மேளன உறுப்பினர்கள், இந்து காலசார மற்றும் கத்தோலிக்க சமய விவகார திணைக்கள அலுவலர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.









(ஏ.எஸ்.எம்.ஜாவித்)