உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது, ஒவ்வொரு உள்ளூர் நிறுவனங்களுக்கும் வேட்பாளர் ஒருவருக்காக 74 – 160 ரூபா வரையில் மாத்திரமே செலவு செய்ய முடியுமென அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின் 03 ஆம் பிரிவுக்கமைய, 2428/72 என்ற இலக்கம் கொண்ட இந்த வர்த்தமானி கடந்த 23 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *