தினகரன் இப்தார் நிகழ்வில் அஷ்ரப் சமத்,ரியாலுக்கு கெளரவம்
தினகரன் ஆசிரிய பீடம் அலுவலகத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு தினகரன் பிராந்திய ஊடவியலாளர்கள் கண்டி ரியால் மற்றும் கொழும்பு அஷ்ரப் ஏ சமத் ஆகியோர்கள் கௌரவிக்கும் நிகழ்வு 25.03.2025 லேக் ஹவுஸ் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தொ.செந்தில் வேலவர் மற்றும் தினகரன் ஆசிரிய பீட ஊடகவியலாளர்களும் மற்றும் லேக் ஹவுஸ் முஸ்லிம் ஊழியர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வின்போது தினகரனில் கவிதைப் பூங்கா மற்றும் கண்டி பிராந்திய செய்தியாளர் எம் ரியால். கொழும்பு பிராந்தியத்தில் கடந்த 3 தசாப்தங்களாக கொழும்பு மாவட்டத்தில் உடனுக்குடன் செய்திகள் புகைப்படங்களைச் சேகரித்து தினகரன் பத்திரிகையில் பிரசுரிக்க உதவும் அஷ்ரப் ஏ சமத் ஆகியோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.










(அஷ்ரப் ஏ சமத்)