உள்நாடு

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு

சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு 2025 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

மனித உரிமைகள் மூலம் அமைதியைப் பாதுகாப்போம்! என்ற தொனிப் பொருளில் இடம் பெற்ற இம்மானாட்டின் நோக்கம் தொடர்பில் இம் மாநாட்டுக்கு தலைமை தாங்கிய  சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் பணியின் நிறுவனர் மற்றும் ஆளுநர், மூத்த கணினி அறிவியல் விரிவுரையாளர், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் விரிவுரையாளர், ஸ்ரீ ராயல் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர், தேசிய கல்வி சேவை மன்றத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், ஸ்ரீ ராஜசிங்க சேனா அறக்கட்டளையின் இயக்குநர் ஜெனரல், வோரா சிட்டி கேம்பஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், கிரேட் பிரிட்டனில் பதிவுசெய்யப்பட்ட லண்டன் விருதுக் கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், ஆசியாவின் பெருமை விருது பெற்ற ஸ்ரீலங்காபிமானி கீர்த்தி ஸ்ரீ தேசமான்ய எமரிட்டஸ் பேராசிரியர் டாக்டர் சிந்தக சமன் குமார.(Dr. Chinthaka Saman Kumara)
 சர்வதேச மனித உரிமைகள்  அமைதிப் பணி உலகிற்கு அமைதியின் செய்தியை கோடிட்டு காட்ட இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருத்தது.
சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் பணி என்பது சர்வதேச, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் சுதந்திரம், கண்ணியம், சமத்துவம், நீதி மற்றும் பிற அடிப்படை மதிப்புகள் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இந்த அமைப்பை உருவாக்குவதில் முன்னணியில் இருந்த அமைப்பு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் 123 ஆம் அத்தியாயத்தின் பிரிவு 3 இன் கீழ் பதிவுசெய்யப்பட்டதாகும்.தற்போது, ​​சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் பணி ஐக்கிய நாடுகள் சபையின் ஐ.நா. கூட்டாளர் போர்ட்டலின் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்
இன்று நடைபெறும் சர்வதேச அமைதி உச்சி மாநாடு நமது சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் பணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 

“மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் மனித நேயத்தையும்,அமைதியையும் கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் பணி, இதன் மூலம் நமது அமைதி செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும்.

  1. மனித உரிமைகள் விழிப்புணர்வை மேம்படுத்துதல்:

2.கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்கள் மூலம் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களிடையே மனித உரிமைகள் விழிப்புணர்வை அதிகரிப்பது.

3.சமூக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் உரிமைகளுக்காக வாதிடும் திறனை உருவாக்குதல் மற்றும் கொள்கை மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் செல்வாக்கு செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவ்வமைப்பின் செயற்பாடுகளின் சிலதாகும் என்றும் கவர்னர்,பேராசிரியர் டாக்டர் சிந்தக சமன் குமார.(Dr. Chinthaka Saman Kumara இதன் போது கூறினார்.
சர்வதேச மனித உரிமைகள் அமைதி  பணி  செயலாளர் – ஸ்ரீலங்காபிமான்ய. தேஷாமன்ய. தேசபந்து. தேஷா கீர்த்தி.லங்கா திலகா. கீத்ரி ஸ்ரீ ஜனரஞ்சனா. லங்காபுத்ரா. சமூக சேவை கீர்த்தி. சமூக சேவை நலநோன்பு விஷாரதா. தூதுவர். பேராசிரியர். டாக்டர். இர்ஷாத்  அகமத்  அவர்கள்  மிஷன் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அதிதிகளாக,

பேபிளியான சுநேத்ரா தேவி ரஜமஹா விகாரை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்க சபை மற்றும் கல்கொட ஸ்ரீ மஹா விகாரை பார்ஸ்வே சங்க சபையின் பிரதம அமைப்பாளர் ஷாசன கீர்த்தி ஸ்ரீ சதர்ம வாகீஸ்வராச்சார தர்ம கீர்த்தி ஸ்ரீ தர்மதாஜ விசித்ரானக சுமண தம்ம ஹிமிப்பானன்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பாலி மற்றும் பௌத்த கற்கைகள் துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அதி பூஜனிய எலமல் தெனியே சரநந்த நாயக்க மகா தேரோத்ரா,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் தர்ஷனபதி களுபஹன பியரதன தேரர்.
சர்வதேச மனித உரிமைகள் அமைதி  பணி  செயலாளர் – ஸ்ரீலங்காபிமான்ய. தேஷாமன்ய. தேசபந்து. தேஷா கீர்த்தி.லங்கா திலகா. கீத்ரி ஸ்ரீ ஜனரஞ்சனா. லங்காபுத்ரா. சமூக சேவை கீர்த்தி. சமூக சேவை நலநோன்பு விஷாரதா. தூதுவர். பேராசிரியர். டாக்டர். இர்ஷாத்  அகமத்  அவர்கள்  மிஷன் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அதிதிகளாக,
பேபிளியான சுநேத்ரா தேவி ரஜமஹா விகாரை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்க சபை மற்றும் கல்கொட ஸ்ரீ மஹா விகாரை பார்ஸ்வே சங்க சபையின் பிரதம அமைப்பாளர் ஷாசன கீர்த்தி ஸ்ரீ சதர்ம வாகீஸ்வராச்சார தர்ம கீர்த்தி ஸ்ரீ தர்மதாஜ விசித்ரானக சுமண தம்ம ஹிமிப்பானன்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பாலி மற்றும் பௌத்த கற்கைகள் துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அதி பூஜனிய எலமல் தெனியே சரநந்த நாயக்க மகா தேரோத்ரா,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் தர்ஷனபதி களுபஹன பியரதன தேரர்.
அமெரிக்க போதகர் மற்றும் கிண்டர் கலாச்சாரத்தின் தலைவர் போப் வோல்க்கர்,
அகில இலங்கை சூஃபி ஆன்மீக சங்கத்தின் (ACSSA) ஸ்தாபகத் தலைவர், தேஷ்மான்யா டாக்டர் எம்.முசின் அப்துல்லா மவ்லவி.
பொலிஸ் திணைக்களத்தின் சட்டப் பிரிவின் பணிப்பாளர், பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் பிட்டியகுபுர
 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச இராஜதந்திர மாநாட்டில் சிறந்த பிரதிநிதியாக  பெயரிடப்பட்ட  இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியும்,ஆப்பிரிக்காவுடன் இணைந்த நைல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பதிவு செய்யப்பட்ட யூரேசிய வளாகத்தில் சட்டக் கற்கைகள் துறைத் தலைவர்.சாமக சமரகோன்,
அகில இலங்கை மஸ்ஜிதுல் உலமா (ACMU) தலைவர் தேச கீர்த்தி மௌலவி  முஹம்மட் சிராஜுதீன்,தஃப்தார் ஜெய்லானி முஹ்யித்தீன் மஸ்ஜித் (குரகலா குகை பள்ளிவாசல்) பொருளாளர் தேச பிரிதி முகம்மது சிக்கந்தர்ஸ்காலர்ஸ் தொண்டு அமைப்பின் தலைவர் (S.C.O) தேஷ்மான்யா எம்.எஸ்.எம்.ஜிப்ரி,

பொரளை  ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பிரதம பூசகரும் பொரளை தெமட்டகொட கோவில்களின் புரவலருமான சர்வதேச பௌத்த சம்மேளன பொரளை பிரிவின் சமாதான குழுவின் பிரதான இந்து சமய ஆலோசகர் ஐக்கிய இலங்கை  பிரத்யங்கிரா பீடத்தின் தலைவர் சமூக பொலிஸ் ஆலோசகர் ஐக்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் இந்து சமய பணிப்பாளர்,லங்கா புத்ரா. கீர்த்தி எஸ். விநாயகன் குருக்கள்,
அகில இலங்கை சூஃபி ஆன்மீக சங்கத்தின் (ACSSA) நிறுவனர் மற்றும் செயலாளர் நாயகம் தேஷ்மான்ய விஷாரத . டி.சிராஸ் சம்சுதீன்  (எம்பிசிஎஸ்),
சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் மிஷனின் தலைமை ஆலோசகர் டாக்டர். பிரீதி குலதுங்க உள்ளிட்ட பெறும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் அமைதி மிஷனின் சர்வேதேச மற்றும் இலங்கை  அங்கத் தவர்கள், பிரதி பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான சான்றிதழ்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டத்துடன், சிறப்பு உரைகளும், கலை நிகழ்வுகளும், இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *