ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
மாகாண மட்ட ஒலிம்பியாட் போட்டி தொகுதி மூன்றாம் பிரிவில் பங்குபற்றிய ஒன்பதாம் தர மாணவன் என்.எம். நியாம், பத்தாம் தர மாணவன் எம்.எம். ரசாத் ஆகிய இருவரும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கும், மாணவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)