சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய சேவைகள் அமைப்பின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர்களாக சர்வமத தலைவர்கள் நியமனம்
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய சேவைகள் அமைப்பினால் சர்வமத தலைவர்களான கெளரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதர் ஆகியோர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர்கள் பதவிக்கு நேற்று (23/03/2025) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான நியமனக்கடித்தை சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய சேவைகள் அமைப்பின் தலைவர் கலாநிதி அமீர்கான் மற்றும் சிரேஷ்ட உருப்பினர்கள் உட்பட இந்நிகள்வுக்கு பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் ஆகியோர்
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய சேவைகள் அமைப்பினால் நேற்று (23/03/2025) “கொழும்பு மெரைய்ன் கிரேன்ட் மண்டபத்தில்” ஏற்பாடு செய்யப்பட்ட ரமழான் இஃப்தார் நிகழ்வின் போது வலங்கிவைத்தார்கள்.
நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை வழுப்படுத்தல். சகல இனங்களுக்கிடையில் சமாதானத்தினையும் சகவாழ்வினையும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றினை நோக்கி அனைத்து இனங்களையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில் சர்வ மத நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலுக்காக இவ்வமைப்பிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள செயற்பணிகளை ஒருங்கிணைத்தல் இப்பதவியின் பிரதான இலக்கு மற்றும் செயற்பணிகளாகும்.
சர்வமத தலைவர்களான கெளரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதர் ஆகியோர் “இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இன ஒற்றுமைக்காக பல்வேறு செயல்பாடுகளை 20வது வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றவர்களாவார்கள்”.
இலங்கையில் இனங்களுக்கு இடையில் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தங்களுடைய அனுபவரீதியான செயல்பாடுகளை கடந்த காலங்களில் நிரூபித்துக் காட்டியவர்களாவார்கள்.
சர்வ மத கூட்டமைப்பின் முக்கியஸ்தவர்களாகவும் சிறந்த இன ஒற்றுமைக்கான முன்மாதிரி மிக்கவர்களாகவும் இந்த சர்வமத தலைவர்கள் செயற்பட்டு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



