மினுவாங்கொடை அல் அமானில் பழைய மாணவர் சங்க இஃப்தார் நிகழ்வு
மினுவாங்கொடை அல்அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் இப்தார் நிகழ்வு நேற்றைய தினம் (23) பாடசாலை அதிபர் ஆஸிம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் பங்கேற்றதுடன், சிறப்பு அதிதிகளாக மினுவாங்கொடை பிரதேச செயலாளர் ராஜகருண, மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் வஜிர ரணராஜா பெரேரா, கல்லொழுவை விகாராதிபதி சங்கைக்குறிய காலே பியானந்த தேரர், மினுவாங்கொடை ஆசன பாராளுமன்ற உறுப்பினர் ருவன் ரணவக ஆகியோரும் விசேட பேச்சாளராக கேகாலை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் மெளலவி அக்ரம் ஜுனைத் ஆகியோரும் கலந்துகொண்டதுடன், பாடசாலையின் நிருவாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









(உபைதுல்லாஹ்- மினுவாங்கொடை)