இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விசேட இப்தார் வைபவம்
கல்ஹின்னையில்
அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் கல்ஹின்னைக் கிளை ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விசேட இப்தார் வைபவம் அன்கும்புர முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் விவாகப் பதிவாளரும் கிளையின் தலைவருமான கே. எம். மபாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் தேசிய அமைப்பின் தலைவருமான சஹீட் எம். ரிஸ்மி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் கண்டி மாவட்ட செயலகத்தின் முஸ்லிம் சமய கலாசார உத்தியோகத்தர் முஹமட் சாலிக, ; இஹலமுல்ல சோமனாந்த பிரிவினாபதி ஸ்ரீராஸ்டாவேதி பண்டித வயம்ப பலாத சங்கநாயக குனானந்த தேரர். இன நல்லிணக்க சபையின் தலைவர் மல்லவ, வெல்கால விஹாராதிபதி ஞானசரி ஹிமி, அங்கும்புர உடவத்தை கோயிலின் பிரதான குரு விக்ணேஸ்வர சர்மா, சிங்கள, தமிழ், கிறிஸ்தவ சர்வ சமயத் தலைவர்கள், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் முக்கியஸ்தர்கள் ,அரச நிறுவனங்களின் அதிகாரிகள் அங்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சுகாதாரப் பரிசோதர்கள் அரசியல் பிரமுகர்கள் அங்கும்புர வியாபார சங்கத்தின் தலைவர், முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







(இக்பால் அலி)