ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 108 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இப்தார் நிகழ்வு
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 108 ஆவது வருட நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (19) விசேட இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.ஏ. அமீர் (சமீம்), ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள், சட்டத்தரணிகள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, விசேட சொற்பொழிவொன்றை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் ஆசிரியர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இப்றாகீம் மதனி நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.



(எச்.எம்.எம்.பர்ஸான்)