அனுராதபுர மாவட்டத்தில் 150 குழுக்கள் போட்டி
எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் 150 குழுக்கள் போட்டியிடுகின்றன.
151 குழுக்கள் கட்டுப்பணம் சேலுத்தியிருந்த நிலையில் ரம்பாவ பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ள சீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் வேட்புமனுவை சமர்ப்பிக்கவில்லை.
இத்தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி சபைகளுக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதன்படி மாவட்டத்தில் அதிகளவான குழுக்கள் கெக்கிராவ பிரதேச சபைக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 13 ஆகும்.இதில் 11 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சை குழுக்களும் அடங்குகின்றன.
இங்கு அனுராதபுரம் மாநகர சபை மற்றும் ஏனைய அனைத்து சபைகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசிய கட்சி ,பொதுஜன ஐக்கிய பெரமுன, தேசிய மக்கள் சக்தி,பொதுஜன பெரமுன மற்றும் சர்வஜன பலய ஆகிய கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 750101 ஆகும். கடந்த பொதுத் தேர்தலை விட 8239 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் 429 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)