களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி தலைவர் ஜெளபர்(ஜே.பி) காலமானார்
களுத்துறை நகர சபை முன்னாள் தலைவரும், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன தலைவருமான அல்-ஹாஜ் எம்.எம்.எம் ஜெளபர் (ஜே.பி) 19ஆம் திகதி களுத்துறையில் காலமானார்.
ஐந்து பிள்ளைகளுக்கு தகப்பனான இவருக்கு வயது 70 ஆகும்.
அன்னாரின் ஜனாஸா இன்று 20ஆம் திகதி வியாழக்கிழமை ளுஹர் தொழுகையுடன் களுத்துறை முஹியித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் (தெருவுப்பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மர்ஹூம் முஹம்மத் மஹ்றூப் தம்பதிகளின் புதல்வரான இவர் பல வருட காலமாக முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் கடமையாற்றினார்.
25 வருட காலமாக அரசியலில் ஈடுபட்ட மர்ஹூம் ஜெளபர் களுத்துறை நகர சபை தலைவராக ஒரு முறையும், உப தலைவராக இரு தடவைகளும், உறுப்பினராக இரு தடவைகளும் பதவி வகித்து களுத்துறை நகரை கட்டியெழுப்ப இன,மத,மொழி,கட்சி,பிரதேச வேறுபாடுகளின்றி நீதியாகவும், நேர்மையாகவும் சேவையாற்றி மக்கள் நன்மதிப்பினை சம்பாதித்துக் கொண்டார்.
களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன தலைவராக மரணிக்கும் வரை பதவி வகித்த இவர் இவ்வமைப்பினூடாக மாவட்ட முஸ்லிம்களின் விமோசனத்திற்காக பாரிய பணிகளைச் செய்துள்ளார்.
(பேருவளை பீ.எம் முக்தார்)