அர்ச்சுனா எம்.பீ க்கு கட்டுப்பாடு
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை, காணொளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி – ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் இன்று (19) அறிவித்தார்.
அதன்படி, மார்ச் 20, 21, ஏப்ரல் 8, 9, 10, மே 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றும் உரைகளை நேரடியாக ஒளிபரப்ப தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரால் அவமதிக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தும் அறிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனவினால் அவ்வப்போது வெளியிடப்படும் தரக்குறைவான கருத்துக்கள், அநாகரீகமான மற்றும் கீழ்த்தரமான கருத்துக்களும் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் எம்.பி. யின் நடத்தையைப் பொறுத்து இந்த தற்காலிக இடைநீக்கத்தை நீக்குவதா இல்லையா என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் மேலும் அறிவித்துள்ளார்.