உள்நாடு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு “இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு

அரசாங்க தகவல் திணைக்களத்தில், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த “இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு, (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பிரதம அதிதியாக, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் விசேட அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் பூரண வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், நாட்டில் முன்னணியில் திகழும் பல முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“முஸ்லிம் எய்ட்ஸ்” நிறுவனம் மற்றும் கிண்ணியாவில் இயங்கும் “குளோபல் எஹ்ஸான் ரிலீப்” நிறுவனம் ஆகியன இணைந்து இந்நிகழ்விற்கு பூரண அனுசரணை வழங்கி இருந்தன.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *