களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு
பேருவளைப் பகுதியில் சமூகங்களுக்கிடையிலான உறவை கட்டியெழுப்பும் நோக்குடன் களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நிகழ்வு கெச்சிமலை தர்காவில் 16ஆம் திகதி நடைபெற்றது.
மாவட்ட சம்மேளன தலைவர் எம்.எச்.எம் உவைன் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்த இன உறவு இப்தார் நிகழ்வில் பெளத்த, கத்தோலிக்க சமயப் பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சர்வமத தலைவர்கள், அரச ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பேருவளை மொல்லியமலை அபிநவராம பெளத்த விஹாரையின் அதிபதி ஹெடிகல்லே விமலரசார தேரோ, கண்டி கட்டுகலே பள்ளிவாசல் இமாம் மெளலவி ஏ.ஏ.எம் அஸ்லம், பேருவளை பிரதேச செயலாளர் ஜானக பெரேரா, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஆர் நவரத்ன ஆகியோர் இங்கு சமூகங்களுக்கிடையிலான உறவுகளை கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி உரையாற்றினார்.
பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் அரூஸ் அஸாத், பேருவளை திடீர் மரண விசாரணை அதிகாரி முஹம்மத் நஸ்ரீன், மாவட்ட அஹதிய்யா சம்மேளன செயலாளர் முஹம்மத் ஹிஷாம் உட்பட உறுப்பினர்கள் பலரும் பங்கு பற்றினர்.




(படங்கள்: பேருவளை பீ.எம் முக்தார்)