அகில இலங்கை சமாதான நீதிவானாக இராமன் செட்டியார் அழகிரிசாமி சத்தியப்பிரமாணம்
முந்தல் கருங்காலிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த இராமன் செட்டியார் அழகிரிசாமி அகில இலங்கை சமாதன நீதிவானாக கடந்த 06 ஆம் திகதி புத்தளம் மாவட்ட நீதிவான் முன்னிலை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் முந்தல் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் ஓய்வு பெற்ற கிராம அதிகாரி, சிறந்த பேச்சாளர், இரு மொழி அறிவிப்பாளர், புத்தளம் மாவட்ட சமயப் பேச்சாளர் ,சமாதான நீதிவான் மத்தியஸ்தர், சமூக சேவையாளர், கருங்காலிச்சோலை ஸ்ரீ கல்யாண முருகன் ஆலய ஸ்தாப தலைவரும் தற்போதைய பிரதம ஆலோசகர், உதயா மரண உதவி சங்க ஸ்தாபகர் ஆவார்.
அகில இலங்கை ஸ்ரீ சாஸ்தா பீடம் சிவநெறி செல்வன் என்ற பட்டத்தையும், புத்தளம் இந்து மகா சபை என்ற பட்டத்தையும், வடமேல் மாகாண அருள் நெறி விழாவில் 1988 ஆம் ஆண்டு திருவருட் செல்வர் என்ற பட்டத்தையும் ,ஆண்டிமுனை தேசிய பாடசாலை சைவ அபிமானி என்ற பட்டத்தையும், தினகரன் வார மஞ்சரி 90 ஆம் ஆண்டு விழாவில் வாழும் நாள் சாதனையாளர் பட்டமும் கலாவிவசணம் என்ற பட்டத்தையும் விருதையும் வழங்கியுள்ளது.இந்து கலாசார திணைக்களம் அறநெறி நல்லாசிரியர் விருதையும் வழங்கியுள்ளது.
இவர் ஸ்ரீ கல்யாண முருகன் ஊஞ்சல் முருகன் பாமாலை மற்றும் இந்து சமய சடங்களும் சம்பிரதாயங்களும் அகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் மகாகும்புக்கடவல பிரதேசத்தில் ஒரு தமிழ் அகில இலங்கை சமாதான நீதிவான் ஆவார்.
(எம்.ஏ.ஏ. காசிம் – முந்தல்)