உள்நாடு

முஸ்லிம் அரசியல் என்பது ஹராம்; முத்திரை குத்தும் பிமல் ரத்னாயக்க

அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் முன்னெடுக்கும் முஸ்லிம் அரசியல் என்பது “ஹறாம்” என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நேற்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது ஹறாம். அவர்களுடைய வியாபாரங்கள் அனைத்தும் ஹராம். அவர்கள் மதத்தின் பெயரால் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளும் ஹறாம் என்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்கின்ற பலர் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய எல்லா அரசாங்கங்களின் அமைச்சரவைகளிலும் இருந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

நாங்கள் எப்பொழுதும் வாக்குகளுக்காக இனவாதம், மதவாதத்தை கையிலெடுத்த அரசியல் கட்சிக் கிடையாது. முஸ்லிம் மக்கள் இன்று தேசிய மக்கள் சக்தியை மிகப் பெரிய முஸ்லிம் கட்சியாக உருவாக்கினார்கள் என்றும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

“சொர்கம் இருப்பது தாய்மாரின் பாதங்களுக்கு அடியில் என்று ஹதீஸில் சொல்லப்படுகிறது. ஒரு தாயான மகளிர் அலுவல்கள் அமைச்சர் பற்றி தொடர்ச்சியாக அவதூறு பரப்புகிறீர்கள்.

நாங்கள் கட்சியென்ற வகையில், கொள்கைகள் அடிப்படையில், ஜனாதிபதி மட்டத்தில் இனவாதத்தை ஒருபோதும் கையிலெடுக்கப் போவதில்லை என கூறியிருக்கிறோம், நிரூபித்திருக்கிறோம்.

நாங்கள் எல்லா கலாசாரங்களையும் மதிக்கிறோம்.

அதனால், இந்த நாட்டில் இருக்கின்ற கண்ணியமான முஸ்லிம் கல்விமான்களிடம் நான் தயவுடன் கேட்டுக்கொள்வது இவ்வாறான அவதூறுகளை நிறுத்துங்கள். இதுபோதும்.

அரசாங்கத்தின் மீது ஏதாவது விமர்சனம் இருந்தால் அதை அரசாங்கத்திடம் வெளிப்படுத்துங்கள்.

நாங்கள் எந்தவொரு சட்டத்தை மாற்றுவது என்றாலும் கலந்துரையாடியப் பின்னரே மாற்றியமைப்போம். நாங்கள் எல்லாம் தெரிந்த பண்டிதர்கள் அல்ல. நாங்கள் கேட்டுதான் செய்வோம்.

ஹறாம் முஸ்லிம் அரசியல்வாதிகளை கடந்த தேர்தலில் முஸ்லிம் மக்கள் நிராகரித்தீர்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் இவர்களை புறக்கணியுங்கள்.

நீங்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள் என்று சொல்லவில்லை. கண்ணியமான, கல்விகற்ற, ஏற்றுக்கொள்ளப்பட்ட, இஸ்லாம் சரிவர பின்பற்றி வாழ்கின்ற முஸ்லிம்களை தேர்வு செய்யுங்கள்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *