“அல் முஸ்லிமாத்” நிறுவனத்தின் உலர் உணவு விநியோகம்
“அல்ஹிதாயா” நிறுவனத்தின் இலங்கை முகவரான ‘அல் முஸ்லிமாத்’ அமைப்பின் அனுசரணையில், பலகத்துறை “ஜெலால்தீன் பவுண்டேஷன்” மூலம் புனித ரமலானை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (15.03.2025) பலகத்துறையில் உள்ள விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
தக்யா வீதியில் உள்ள ‘அம்ரா’ திருமண மண்டபத்தில் இதற்கான நிகழ்வு காலை 10.00 மணி வரை முதல் நடைபெற்றது.
ஜெலால்தீன் பவுண்டேஷனின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சுரையா அத்தீக் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தெரிவு செய்யப்பட்ட 63 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.