ரமழான் காலத்திலும் இஸ்ரேல் காஸா மீது பயங்கர தாக்குதல்; நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பு
இஸ்ரேல் படைகள் நேற்று முதல் காஸா மீது நடாத்தி வரும் தொடர் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவிலுள்ள ஹமாஸின் இலக்குகள் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் தற்போதைய தாக்குதல்களில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டுள்ளனர்.
பணயக் கைதிகளை விடுவிக்க மறுத்ததன் காரணமாக இத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தாக்குதல் மேலும் தீவிரமாகலாம் என்றும் இஸ்ரேல் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாத கால யுத்த நிறுத்தத்தின் பின் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தாக்குதல்களில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.