காலஞ்சென்ற மெளலவி சலாஹுதீன் ஞாபகார்த்த சொற்பொழிவும், இப்தார் நிகழ்வும்
கண்டி மௌலானா மௌலவி காலம் சென்ற சலாகுதீன் அவர்களின் ஞாபகார்த்த சொற்பொழிவும், இப்தார் நிகழ்வும் சனிக்கிழமை (15) மாளிகாவத்தை செரன்டிப் மண்டபத்தில் முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அஹ்மத் முனவர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு அனுசரணையை முஸ்லிம் சலாஹுதீன் வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் தலைமை உரை தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நிகழ்த்தினார்.
காலம் சென்ற ஸலாஹுத்தீன் மௌலவி பற்றிய நினைவுப் பேருரை ஜாமியா நளீமியா பணிப்பாளர் அஷ்ஷேக் அகார் முஹம்மத் நிகழ்த்தினார். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் உரைநிகழத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட கண்டி மாவட்ட தேசிய சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டி மாவட்ட உலமாக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு உரையாற்றிய அகார் முஹம்மத், மறைந்த ஸலாஹுத்தீன் அவர்கள் உலகப் பெயர் பெற்ற ஒர் பேரரிஞர் அவர் இலங்கையில் மட்டுமல்ல முழு நாடுகளிலும் மார்க்க ரீதியில் பெயர் பெற்று விளங்கினார் அவர் மும்மொழிகளிலும் சிறந்து விளங்கியவர் நுாற்றுக்கு மேற்பட்ட நுாலை எழுதியவர் ஓர் ஆசிரியர் கண்டியில் மட்டுமல்ல நாட்டில் பல பிரதேசங்களிலும் தேசிய ஐக்கியத்தை வளர்த்தவர்.
அவர் நாட்டின் சகல தேசிய நிகழ்வில் முஸ்லிம் சமய வழிபாடுகளில் அரச வைபவங்கள் அவரது ஆசீர்வாதம் நடைபெறும். நாட்டின் பல பாகத்திற்கும் சென்று மார்க்க உபன்யாசம் செய்வார் அதனை விட இந்தியா , புருனை போன்ற நாடுகளுக்கு சென்றாலும் ஸலாஹுத்தீன் மௌலவி த் தெரியுமா எனக் கேட்பார்கள்.
அவர் இலங்கை வானொலியில் தொடர்ச்சியாக பல நூற்றுக் கணக்கான இஸ்லாமிய சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். அவைகள் தற்பொழுது மீள் ஒலிபரப்ப பட்டு வருகின்றது, அன்றைய ஜே.ஆர் ஆட்சிக் காலத்தில் மகாவலி திறப்பு விழாவில் கூட ஸலாஹுத்தீன் மௌலவி அவர்களின் இஸ்லாமிய ஆசீர்வாதம் நடைபெறும் அந்த அளவுக்கு அவர் பெரிதும் மதிக்கத்தக்க மனிதராக செயல்பட்டார்.
தனது மகன் திருமணத்தை கண்டியில் நடத்திவிட்டு கொழும்பு சென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் திருமணத்தையும் நடத்தி வைத்த குறிப்பிடத்தக்கது.














(அஷ்ரப் ஏ சமத்)