அனுராதபுர நகரில் பெருத்தப்பட்டுள்ள CCTV கெமெராக்கள் செயலிழப்பு
அனுராதபுரம் நகரின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட சிசிடிவி அமைப்பு தற்போது செயலிழந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதன் காரணமாக நகரின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவிடம் வினவிய போது இந்த சிசிடிவி கமர அமைப்பு ஒரு வருடத்திற்கும் மேலாக செயலிழந்துள்ளதாகவும் அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை அனுராதபுரத்தில் வைத்தியரின் சம்பவத்திற்கு முகம்கொடுத்த இடம் இன்னும் இரவு வேளையில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)